Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அண்ணாத்த படத்திற்காக உடல் எடையை குறைத்த மீனா

Meena

நடிகை மீனா 1991-ம் ஆண்டு வெளியான `என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின்னர் படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தற்போது சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் அவர் ரஜினியின் மனைவியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக அவர் தனது உடல் எடையை குறைத்துள்ளார். ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன் மீனா, ரஜினியுடன் எஜமான், வீரா, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 24 வருடங்களுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Meena
Meena