Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அது வேண்டாமே…. ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை விடுத்த அஜித்

ajith

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் அஜித்தின் பிறந்தநாள் (மே 1-ந் தேதி) நெருங்கி வருவதால், அவரது ரசிகர்கள் தற்போதிலிருந்தே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அதன் ஒரு பகுதியாக அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறும் விதமாக பொது டிபி ஒன்றை திரைப்பிரபலங்கள் மூலம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அந்த பொது டிபியை வெளியிட இருந்த பிரபலங்களில் நடிகர் ஆதவ் கண்ணதாசனும் ஒருவர்.

இந்நிலையில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: அஜித்தின் அலுவலகத்தில் இருந்து எனக்கு போனில் அழைப்பு வந்தது. கொரோனா நேரத்தில் அவரின் பிறந்தநாளுக்காக பொது டிபி வெளியிட்டு கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். இது அவருடைய தனிப்பட்ட கோரிக்கை. ஒரு ரசிகனாக, சக நடிகனாக, மனிதனாக அவரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க விரும்புகிறேன். இந்த கோரிக்கையை நான் டுவிட் செய்து விளக்கட்டுமா என்று கேட்டதற்கு அவர்கள் சரி என்றார்கள். இந்த நேரத்தில் அனைவரும் நலமாக வாழ வாத்துவோம். தல அஜித்தின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.