Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அந்த அலை அரசியல் கரையை தொடும் பொழுது சுனாமியாகும் – ரஜினிகாந்த் அதிரடி பேச்சு

Rajini

தமிழ்திரையுலகின் தலைசிறந்த நடிகர்களில் மிக முக்கியமான ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினி கடந்த சில வருடங்களாக தான், அரசியல் பார்வை குறித்து பேசிக்கொண்டே தான் இருக்கின்றார்.

ஆனால் சென்ற வாரம் சென்னையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த்.

அதில் அவர் பேசுகையில் ‘கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை’ என்று கூறினார். இதன் மூலம் ரஜினிகாந்த் வெற்றி பெற்றாலும் முதலமைச்சராக இருக்க போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து எனக்கு தமிழ் நாட்டில் ஏற்படும் அந்த ஒரு அரசியல் புரட்சி தெரிய வேண்டும். அந்த ஒரு எழுச்சியை நீங்கள் தான் என் கண் முன்னாள் கொண்டு வந்து நிறுத்து வேண்டும் என்று கூறினார்.

மேலும் இது நடந்தால் அப்போது நான் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறேன் என்று அதிரடியாக கூறினார்.

இந்நிலையில் இன்று விழா ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்த ரஜினிகாந்த். அங்கு பேசும் போது “நான் வைத்த அரசியல் புள்ளி சுழியாகி அலையாகியுள்ளது, அதனை வலிமைப்படுத்த வேண்டும். அந்த அலை அரசியல் கரையை தொடும் பொழுது சுனாமியாகும்” என்று அதிரடியாக கூறியுள்ளார்.