சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் விரைவில் ஹீரோ படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் படுதோல்வியடைந்தது.
அதை தொடர்ந்து நம்ம வீட்டு பிள்ளை செம்ம ஹிட் அடிக்க, மீண்டும் தன் பழைய பார்முக்கு சிவகார்த்திகேயன் வந்துவிட்டார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் ‘மிஸ்டர் லோக்கல் படம் நடித்தது முழுக்க முழுக்க என் தவறு, இயக்குனர் ராஜேஸை எனக்கு மிகவும் பிடிக்கும்.
பாஸ் என்கின்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி போன்ற சூப்பர் காமெடி படங்களை எடுத்தவர்.
அவரிடம் நான் வேறு கதை வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும், ஆனால், நான் அந்த சமயத்தில் இருந்த ஒரு சில பிரச்சனைகளால், நடித்துக்கொடுத்தால் போதும் என்று நடித்துவிட்டு விலகிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.