Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அந்த ராசி சுவாதிக்கு கிடைக்குமா?

actress swathi reddy

தமிழில் ‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் அறிமுகமானவர் சுவாதி. அதன்பின், “போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை” உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2018ம் ஆண்டு அவருடைய காதலரை திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியா நாட்டில் செட்டிலானார்.

திருமணத்திற்குப் பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் தெலுங்கில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பின் கொஞ்சம் குண்டாகிப் போன சுவாதி, படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதால் உடற்பயிற்சி செய்து தற்போது ஸ்லிம் ஆகி இருக்கிறார்.

அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். திருமணத்திற்குப் பின்னும் தற்போது சினிமாவில் தொடர் வெற்றிகளை சிலர் குவித்து வருகிறார்கள். அந்த ராசி சுவாதிக்கும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.