Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அமலாபாலின் திருமணம் பற்றிய பதிவு

amala paul

நடிகை அமலா பாலுக்கு ஏ.எல்.விஜய் உடனான முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததை அடுத்து, வேறு ஒருவரை காதலித்து வருவதாக ஆடை பட ரிலீஸ் சமயத்தில் அமலா பால் தெரிவித்திருந்தார். மும்பையை சேர்ந்த பாடகர் பவனிந்தர் சிங்கை தான் அமலா காதலிப்பதாக பேசப்பட்டது.

இந்நிலையில், அமலா பால் தனது டுவிட்டர் பக்கத்தில், “நீங்கள் தான் உங்களுடைய இரட்டைச் சுடர், பாதுகாவலர், ஆத்ம துணை, அன்பானவர், நம்பிக்கையின் புதிய சக்தி, சுதந்திர மத்திரம், நபிகள், புத்தர், ஆன்மிக வழிகாட்டி, தெய்வீக இணை, ஹீரோ மற்றும் ஹீலர் என்பதை அறியும்போது எவ்வளவு மயக்கம் அளிக்கிறது” எனும் சிறுகதை எழுத்தாளர் ரூன் லஸுலியின் வரிகளை பதிவிட்டுள்ளார்.

அமலாபாலின் இந்த வரிகள், அவர் எந்த காதலிலும் இல்லை, நமக்கு நாமே தான் எல்லாமும் என்பதை மறைமுகமாக கூறுவதாக ரசிகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.