கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய-மாநில அரசுகள் மும்முரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சினிமா தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்கள் சில மாநிலங்களில் மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் தியேட்டர்கள் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது:- அரசு உத்தரவு இன்னும் எங்களுடைய கைக்கு வரவில்லை. அரசு உத்தரவு கிடைக்க பெற்றதும், சினிமா தியேட்டர் மூடப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும்.
சென்னையில் எல்லா தியேட்டர்களிலும் வழக்கம்போல் படங்கள் திரையிடப்பட்டன. எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல் போன்ற இடங்களில் உள்ள தியேட்டர்கள் மூடப்படும். சென்னையில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.