Tamilstar
Movie Reviews

அழியாத கோலங்கள் 2 திரை விமர்சனம்

நடிப்பு : பிரகாஷ் ராஜ், அர்ச்சனா, ரேவதி, நாசர், விஜய் கிருஷ்ணராஜ், ஈஸ்வரி ராவ், மோகன் ராம், மற்றும் பலர்

தயாரிப்பு : வள்ளி சினி ஆர்ட்ஸ்

இயக்கம் : எம்.ஆர்.பாரதி

இசை : அரவிந்த் சித்தார்த்

மக்கள் தொடர்பு : மெளனம் ரவி – மணவை புவன்

வெளியான தேதி : நவம்பர் 2019

ரேட்டிங் : 2.5 /5

இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1979ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம்தான் அழியாத கோலங்கள் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதாப் போத்தன் கதாநாயகியாக ஷோபா நடித்திருந்தனர்.

உலகநாயகன் கமலஹாசன் கௌரிசங்கர் என்ற கதாபாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார் அழியாத கோலங்கள் 2 திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் கௌரி சங்கர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இயக்குனர் பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள் திரைப்படத்திற்கும் இந்த அழியாத கோலங்கள் 2 திரைப்படத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. படத்தின் பெயர் மட்டுமே தான்.

தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் ( கௌரி சங்கர் ) கதாநாயகன் பிரகாஷ்ராஜ் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் ஒரே மகன் அமெரிக்காவில் கல்யாணம் செய்துக் கொண்டு வசிக்கிறார். கதாநாயகன் பிரகாஷ்ராஜ் எழுதிய ஒரு நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்படுகிறது டில்லிக்கு சாகித்ய அகாடமி விருது பெற செல்கிறார்
அந்த விருதை பெற்றுக் கொண்டு தனது வீட்டிற்கு செல்லாமல் அதை எடுத்துக் கொண்டு நேராக வீட்டிற்கு வராமல் ரயிலில் டிக்கெட் புக் செய்துவிட்டு, அதில் வராமல் ‘ ஃப்ளைட் ‘டில் சென்னையிலேயே வசிக்கும்
அவருடன் கல்லூரியில் படித்த தோழி கதாநாயகி அர்ச்சனாவின் வீட்டுக்கு சென்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். கதாநாயகி அர்ச்சனா. கணவரை இழந்தவர்..ஒரே மகள் வெளியூரில் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள்.

24 வருடங்கள் கழித்து சந்திப்பவர்கள் பல விஷயங்களை மிக டீஸண்ட்டாக பேசி 24 மணி நேரம் இருப்பதாக திட்டம். விடிய, விடிய பல விஷயங்களை பேசுகின்றனர். குட் ஃநைட் தனித்தனியே சொல்லிவிட்டு படுக்க செல்கின்றனர்.

அந்த சமயம் கதாநாயகன் பிரகாஷ்ராஜிக்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மரணமடைகிறார் போலீஸ் விசாரணை மற்றும் லோக்கல் அரசியல்வாதிகள் பிரச்சனை போலீஸ் ஆபீஸர் நாசரின் சபல புத்தியின் பேச்சுகள் அடுத்தடுத்து சம்பவங்களால் நிலைகுலைந்து நிற்கும் கதை அர்ச்சனா என்ன செய்கிறார் என்பதுதான் இந்த அழியாத கோலங்கள் 2 திரைப்படத்தின் மீதிகதை

அந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர் குற்றப் பார்வையிலிருந்து மீள கதாநாயகி அர்ச்சனாவிற்கு என்ன வழி..?

விசாரணைக்கு வரும் நாசரின் குதர்க்கமான கேள்விகள்…அரசியல்வாதி விஜய் கிருஷ்ண ராஜின் எதிர்பார்ப்பு..மகளின் கடுமையான பேச்சு, பிரகாஷ் ராஜின் மனைவி ரேவதியின் அணுகுமுறை- இவற்றுக்கிடையே தணலில் விழுந்த புழுப் போல அர்ச்சனாவின் அபாரமான நடிப்பு, தேசிய விருது இன்னொரு முறை வாங்கும் தகுதியுடையது.

கதாநாயகன் பிரகாஷ் ராஜ்- பிரமாதமான நடிகர் என்பதை இம்மியளவும் பிசகாமல் கொடுத்து அப்ளாஸ் வாங்குகிறார்.

ரேவதியும் சும்மாவா என்ன..? உணர்வுப்பூர்வமான பெண்மணியாக வந்து அர்ச்சனாவை சந்தித்துப் பேசுவது சூப்பர்..!

இன்ஸ்பெக்டர் நாசரின் விசாரணை, அர்ச்சனாவை இரிட்டேஷன் செய்வது என்று அட்டகாசமான நடிப்பு…

இந்த திரைப்படத்தை வள,வளவென்று போரடிக்க வைக்காமல், ஷார்ப் ஆக கொடுத்திருக்கும் இயக்குநர் எம்.ஆர். பாரதியிடம் தமிழ் திரைப்பட உலகில் ,‌இதுப்போன்ற நல்ல படங்களை தொடர்ந்து எதிர்பார்க்கிறது.

ராஜேஷ் கே. நாயரின் ஒளிப்பதிவு அருமை… காட்சிகள் மனதை கொள்ளையடிக்கிறது. அரவிந்த் சித்தார்த்தின் இசையில் வைரமுத்துவின் பாடல்கள் அர்த்தம் பொதிந்தவை.

இதுபோன்ற தரமான,‌டேஸ்ட்டான நல்ல படம் பார்த்து நாளாச்சு.. இந்த படத்தை நல்லாயிருக்குது என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டுப் போனால் நல்லதல்ல..! பலமாக கொண்டாட வேண்டும்.. அதற்கான அத்தனை தகுதிகளும் கொண்ட படம்

மிக சிறப்பாக நடிக்க கூடியவர்களை நன்றாக பயன்படுத்தி படம் பண்ணியிருக்கிறார், டைரக்டர் எம்.ஆர். பாரதி..! பி.சி. ஸ்ரீ ராம் இயக்கிய ‘ மீரா ‘ படத்தின் வசனம் எழுதியவர். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம்,
‘ அழியாத கோலங்கள்-2 ‘..!

‘ அழியாத கோலங்கள்-2 ‘காதல் என்றும் அழிவதில்லை