Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆக்‌ஷன் நாயகியாக களமிறங்கும் அனுஷ்கா

Anushka Shetty

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருப்பவர் அனுஷ்கா. ‘பாகுபலி’ படங்களுக்கு பிறகு அவர் நடித்த ‘பாகமதி’ படமும் வெற்றி படமாக அமைந்தது. தற்போது ‘நிசப்தம்’ படத்தில் நடித்து முடித்துள்ள அனுஷ்கா அடுத்து, கவுதம் மேனன் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மூன்று படங்களில் இதுவும் ஒரு படம் என்கிறார்கள். தமிழ், தெலுங்கில் உருவாக உள்ள இந்த படத்தில் அனுஷ்கா, ஆக்‌ஷன் ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ளாராம். பிரபல இந்தி திரைப்பட இயக்குனரான கோவிந்த் நிகலானி எழுதியுள்ள கதையைத்தான் கவுதம் மேனன் படமாக இயக்க உள்ளதாக சொல்கிறார்கள்.

கமல்ஹாசன், அர்ஜுன் நடித்து 1996ம் ஆண்டில் வெளிவந்த ‘குருதிப்புனல்’ படத்தின் ஒரிஜனல் படமான ‘துரோக்கால்’ மற்றும் தேசிய விருதுகளைப் பெற்ற படங்களை இயக்கியவர் கோவிந்த். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் எழுதியுள்ள கதை தமிழில் படமாக உள்ளது.