தமிழக மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரஜினியின் ரசிகர்கள் என பலரின் எதிர்பார்ப்பு ரஜினியின் அரசியல் வருகை குறித்து இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை லீலா பேலஸில் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது.
ரஜினி சரியான நேரத்திற்கு வருகை தந்து பேச தொடங்கினார்.
இதில் அவர் கட்சி முடிவுகள் குறித்து தெரிவித்துவிட்டால் எனக்கும் மக்களுக்குமான தெளிவு பிறந்துவிடும் என கூறினார்.
மேலும் நான் 25 வருடமாக அரசியலுக்கு வருவேன் என கூறி வந்ததாக கூறுகிறார். ஆனால் நான் அதிகாரப்பூர்வமாக அரசியலுக்கு வருவதாக கூறியது 2017 டிசம்பர் 31 ல் கூறினேன்.
அதற்கு முன்பு நான் கூறி வந்தது அரசியல் முடிவும் ஆண்டவன் கையில் என கூறிவந்தேனே தவிர அரசியலுக்கு வருவேன் என கூறவில்லை.
மேலும் சோ, மூப்பனார், கலைஞர் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டார்.
எனக்கு மூன்று திட்டங்கள் வைத்திருப்பதாக கூறினார்.
ஆட்சிவந்தால் தேர்தல் முடிந்த பிறகு தேவையான பதவி மட்டுமே வைத்துக்கொண்டு கட்சி நடத்த நினைக்கிறேன்.
என் கட்சியில் 60 சதவீதத்தினர் ஓரளவுக்கு படித்தவர்கள், இளைஞர்கள், நல்ல பெயர் பெற்றவர்கள் என 50 வயதுக்குட்பட்டவர்களை இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
35 முதல் 40 சதவீதம் மற்ற கட்சியினர்.
மற்றும் சிலர் ஐஏஎஸ், ஐபிஎஸ், வக்கீல் என பலரை நாடி தேடிச்சென்று அரசியலுக்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளேன்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், அனுபவமுள்ளவர்கள் கொண்டு ஆலோசனை குழு நிர்வகிப்பேன்.
முதலமைச்சர் பதவி வேண்டாம், எனக்கு ஆசையில்லை, எண்ணம் இல்லை என கூறிவிட்டார். அழைப்புகள் வந்த போதும் நான் அதை தவிர்த்துவிட்டேன்….
பொறுப்புள்ளவனை, தன் மானம் உள்ளவனை அந்த பொறுப்பில் உட்கார வைப்போம் என கூறியுள்ளார்.
நான் முதலமைச்சர் பதவியை விரும்பவில்லை என கூறியதை ரசிகர்கள் நிர்வாகிகள் ஏற்காதது எனக்கு ஏமாற்றம்.
ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் தலைவர்களின் இடங்கள் பெரும் வெற்றிடமாகிவிட்டன. ஒரு பக்கம் ஆள் பலம், கட்சி கட்டமைப்பு, பண பலம் கொண்டு 10 வருடங்களாக ஆட்சியில்லாமல் வாரிசாக அரசியிலில் நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்.
மறுபக்கம் குபேர கஜானாவை கையில் கொண்டு ஆட்சியும் கொண்டு மற்றவர்கள் காத்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
மேலும் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும், எல்லோரிடமும் போய் சொல்லுங்கள், மாற்றம் எல்லோரிடமும் வரவேண்டும், இந்தியா முழுக்க இவை பரவேண்டும், அப்போது நான் வருகிறேன்.
என்னை நம்பி வந்தவர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை என கூறிவிட்டார்.