Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆபாச வீடியோவில் இருப்பது நான் இல்லை – கேரள நடிகை

juhi rustagi

மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகையாக இருப்பவர் ஜூஹி ரஷ்டகி. இவர் நடித்துள்ள உப்பும் மிளகும் என்ற நகைச்சுவை தொடர் கேரள ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார்.

தற்போது ஊரடங்கால் பொதுமக்களும், நடிகர்-நடிகைகளும் வீட்டில் முடங்கி உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு ஆபாச வீடியோ பரவியது. அந்த வீடியோவில் இருக்கும் பெண் ஜூஹி ரஷ்டகி என்று கூறப்பட்டது. ஆபாச வீடியோவை பார்த்த மலையாள ரசிகர்கள் பலர் அதை வைரலாக்கினார்கள். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ஜூஹி ரஷ்டகி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- “எனது பெயரில் ஆபாச வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இது போலி வீடியோ என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த வீடியோவை வெளியிட்டவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். இதில் சம்பந்தப்பட்டவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் டி.ஜி.பியிடமும், எர்ணாகுளம் போலீசிலும் புகார் அளித்துள்ளேன்”. இவ்வாறு ஜூஹி ரஷ்டகி கூறியுள்ளார்.