கார்த்தி நடித்து செல்வராகவனின் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.
இப்படம் வெளிவரும் பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. ஆனால் தற்போது இப்படத்தை சமூக வலைத்தளங்களின் மூலமாக மிக பெரிய அளவில் கொண்டாட தொடங்கிவிட்டனர்.
மேலும் ரசிகர்கள் இப்படத்தின் 2 பாகம் எப்போது வரும் என்றும் கேட்க தொடங்கி விட்டார்கள் .
இந்நிலையில் அண்மையில் பிரபல விருது விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், இயக்குனர் செல்வராகவன் அவர்களுக்கு முன் நின்று “ஆயிரத்தில் ஒருவன் 2 இருந்தால் நான் அதில் கண்டிப்பாக இருப்பேன்” என்று வெளிப்படையாக கூறினார்.