Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் டிராப்பான தனுஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Dhanush

செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் அரவிந்த் கிருஷ்ணா. இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக இருந்த படம் ‘திருடன் போலீஸ்’. புதுப்பேட்டை படத்துக்கு பின், அதாவது 2006ம் ஆண்டு இப்படத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் கைவிட்டப்பட்டது.

இப்படத்தை தனுஷின் சகோதரி விமல கீதா தயாரிப்பதாக இருந்தது. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில், டிராப்பான திருடன் போலீஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் இப்படத்தை மீண்டும் எடுத்தால் தரமான சம்பவமாக இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.