விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் குட்டி ஸ்டோரி என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. தற்போது ‘வாத்தி கம்மிங்…’ என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். வித்தியாசமான குத்துப்பாடல் போன்று அனிருத் இசையமைத்திருக்கும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் சமூக வலைத்தளத்தில் இந்த பாடல் வைரலாகி வருகிறது.
இந்த பாடலில் விஜய்யின் நடனம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.