Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்தி படத்தில் தமிழனாக நடிக்கும் தனுஷ்

dhanush and akshay kumar

தனுஷ் ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் புதிய இந்தி படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். தனுஷ் ஜோடியாக பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் மகள் சாரா அலிகான் நடிக்கிறார். அக்‌ஷய்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். படத்துக்கு ‘அத்ரங்கி ரே’ என்று பெயரிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தமிழிலும் இந்த படத்தை வெளியிடுகிறார்கள்.

இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ் மதுரையை சேர்ந்த இளைஞனாக நடிக்கிறார். மேலும் இதன்கதை வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சாரா அலிகான் இதில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.