Tamilstar
Spiritual

இந்த ஒரு செடியை வீட்டில் வைத்தால் போதும்…. வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்கி செல்வம் பெருகும்!

சங்குப்பூ செடி உங்களை பணக்காரராக்கும். ஏனெனில் சங்குப்பூ செடி வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு உதவுவதாக கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டில் சரியான திசையில் நட்டால், லட்சுமி தேவியின் அருள் பெறுவீர்கள். சங்குப்பூவின் வாஸ்து பரிகாரங்களையும் அதன் பலன்களையும் தெரிந்து கொள்வோம்.

நமது வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருளையும் வாஸ்துப்படி வைக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே தான், நாம் வீட்டில் வைக்கும் பொருட்கள், பிராணிகள், செடிகள் அனைத்தும் முக்கியமானவை என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வாஸ்து தோஷம் ஏற்பட்டால், வீட்டில் அமைதியின்மை, நிதி நெருக்கடி, ஆரோக்கியம் இன்மை என பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

உங்கள் வீட்டின் தோட்டத்திலோ அல்லது வீட்டின் உள்ளேயோ நடப்படும் மரங்கள் மற்றும் செடிகளுக்கும் வாஸ்து சாஸ்திரம் உள்ளது என உங்களுக்கு தெரியுமா?. ஆமாம், சில செடிகளை வீட்டில் நடுவதும், அவற்றை முறையாக பராமரிப்பதும் வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

நமது வீட்டில் வளர்க்கும் இந்த தாவரங்கள் நமக்கு அதிர்ஷ்டத்தை தரும் என நம்பப்படுகிறது. அப்படி மணி பிளாண்ட்க்கு அடுத்து நன்மையை வழங்கு செடியாக சங்குப்பூ பார்க்கப்படுகிறது. நம்பிக்கையின் படி, லட்சுமி தேவி அபராஜிதா செடியில் வசிக்கிறார் என கூறப்படுகிறது. எனவே, இந்த செடியை வீட்டில் நட வேண்டும். சங்குப்பூ செடி தொடர்பான சில வாஸ்து விதிகள் மற்றும் அதை எந்த திசையில் சரியாக நட வேண்டும் என்று கூறுகிறார். அபராஜிதா செடியை எந்த திசையில் நட வேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சங்குப்பூ செடியை எந்த திசையில் வைக்க வேண்டும்?

உங்கள் வீட்டில் சங்குப்பூ செடியை நட விரும்பினால், வீட்டின் கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசை சிறந்த திசை என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீட்டின் வடகிழக்கு திசை ஈஷானி மூலை என்று அழைக்கப்படுகிறது. வடகிழக்கு திசை கடவுளின் திசை என்று நம்பப்படுகிறது.

கடவுள் இந்த திசையில் வசிக்கிறார். அதனால் தான் வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக சங்குப்பூ செடியை நடுவது நல்லது. இது தவிர, உங்கள் வீட்டின் பிரதான கதவின் வலது பக்கத்தில் இந்த செடியை நடலாம் அல்லது ஒரு தொட்டியில் நட்டு உங்கள் வீட்டின் பிரதான கதவுக்கு வலது பக்கத்தில் வைக்கலாம்.

அபராஜிதா செடியை எந்த நாளில் நட வேண்டும்?

அபராஜிதா செடியை எந்த நாளும் சௌகரியமாக நடலாம், ஆனால், இந்த செடியை உங்கள் வீட்டில் வியாழன் அல்லது வெள்ளி கிழமை நட்டால் மிகவும் மங்களகரமானது. எனவே, இது உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். வியாழன் பகவான் விஷ்ணுவின் நாளாகக் கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதனால், சங்குப்பூ செடியை இந்த இரண்டு நாட்களிலும் உங்கள் வீட்டில் நடலாம்.

வீட்டின் தலைவருக்கு மங்களகரமானது :

சங்குப்பூ செடியை வீட்டில் நடுவதன் மூலம் வீட்டின் தலைவருக்கு பலன் கிடைக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் வீட்டின் நான்கு மூலைகளையும் அழகாக்க சங்குப்பூ செடிகளை தொட்டிகளில் நட்டு, உங்கள் வீட்டின் நான்கு திசைகளிலும் வைக்கலாம்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் தென்மேற்கு மூலையில் சங்குப்பூ செடியை நடுவதன் மூலம், வீட்டின் தலைவருக்கு முன்னேற்றம் மற்றும் தேவையற்ற கவலைகள் விலகும். வீட்டில் சங்குப்பூ செடியை நடுவதன் மூலம் வீட்டில் உள்ள மனக்கஷ்டம் குறைவதுடன், வீட்டில் உள்ளவர்களுக்கு மன அமைதியும் கிடைக்கும்.