Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த பாடலுக்கு இணையான வேறு பாடல் இருக்கிறதா – விவேக்

vivek

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக கலக்கி வருபவர் விவேக். விஜய், அஜித் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இவர் காமெடியில் அசத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான தாராள பிரபு படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் பாடகி ஜானகிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், ஜானகி பாடிய ‘சிங்காரவேலனே நீ வா’ எனும் பாடலை குறிப்பிட்டு, இந்த பாடலுக்கு இணையான வேறு பாடல் இருக்கிறதா, கந்தர்வ கான குரலிசை’ என பெருமையாக பதிவிட்டுள்ளார்.