அவன் இவன், தூங்காவனம், குடாச்சாரி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் மதுஷாலினி. இவர் தற்போது இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த ‘பஞ்சராக்ஷ்ரம்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி வைரமுத்து இயக்குகிறார்.
இப்படத்தில் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின் ஜெரோம், சனா அல்தாஃப் சீமான், ராஜா மற்றும் ஜீவா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
நடைமுறைக்கு மாறாக மற்றும் தற்செயலாக எனத் தொடங்கும் விஷயம் விரைவில் அனைவரையும் நம்பமுடியாத அதிர்ச்சியில் ஆழ்த்தி ஒரு பயங்கரமான கொந்தளிப்பாக மாறுகிறது.
கரி மோட்டார் ஸ்பீட்வேயில் 2 ரெட் டிராகன்கள், 2 ஏ.ஆர்.ஆர்.ஐ அலெக்சாஸ், 7 கோ ப்ரோஸ் மற்றும் 2 டி.ஜே.ஐ ட்ரோன்கள் போன்ற பல சிறப்பம்சங்களைப் பயன்படுத்தி 2 நாட்கள் நேரடியாக படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். ‘பஞ்சராக்ஷ்ரம்’ நேரடி கார் ஃபிளிப் ஸ்டண்ட் இடம்பெறும் முதல் இந்திய திரைப்படமாக இருக்கும்.
இப்படத்தின் இசை டிசம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்த திரைப்படம் உலகளவில் டிசம்பர் 27ம்தேதி வெளியாக இருக்கிறது.