Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன் – சிபிராஜ்

sibiraj family

நடிகர் சிபிராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வால்டர்’ நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிபிராஜுடன் சமுத்திரக்கனி, நட்டி நடராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இதனையடுத்து சிபிராஜ் கபடதாரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் ஜான் மகேந்திரன் இணைந்து திரைக்கதை அமைக்க, சத்யா பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்து எழுதியுள்ள பதிவில், ”இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.