விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் பிகில் படம் பிரமாண்ட வசூல் சாதனை செய்தது.
இந்நிலையில் விஜய் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனம் மீது வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இரண்டு நாட்களாக விஜய்யிடம் விசாரணை நடந்து வருகின்றது.
அப்படியிருக்க விஜய் நேற்று மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்து வருமான வரித்துறையினர் வண்டியிலேயே அழைத்து வரப்பட்டார்.
அப்போது விஜய் வீட்டிற்குள் வரும் போது பல பத்திரிகையாளர்கள் சூழ்ந்துவிட்டனர், உடனே கையை வைத்து தன் முகத்தை மூடிக்கொண்டே சென்றார் விஜய்.
இதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே மிகவும் மனம் நொந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.