Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உடல் எடையை குறைக்கும் கங்கனா

Kangana Ranaut

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க பல்வேறு திரைப்பிரபலங்கள் முயன்று வருகின்றனர். அந்த வகையில் நடிகை கங்கனா ரனாவத், இந்த விடுமுறையில் தனது உடல் எடையை குறைக்க உள்ளதாக கூறியுள்ளார்.

தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் தலைவி படத்தில் நடித்து வந்த கங்கனா, ஜெயலலிதா வேடத்திற்காக 20 கிலோ வரை தனது உடல்எடையை அதிகரித்து நடித்தார். தற்போது அவரது காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டதால், உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உள்ளதாக கங்கனா தெரிவித்துள்ளார். இதற்காக வீட்டிலேயே தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் கங்கனா.