மலையாள திரையுலகில் நடிகையாக நடிக்க துவங்கியவர் கீர்த்தி சுரேஷ். முதலில் தனது திரையுலக பயணத்தை குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தார்.
இதன்பின் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வெளிவந்த கிதாஞ்சலி படத்தில் நடித்து கதாநாயகியாக திரையுலகில் தோன்றினார் கீர்த்தி சுரேஷ்.
இதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமானர்.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு திரும்பிய நடிகை கீர்த்திக்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆம் ரஜினிமுருகன், ரெமோ, பைரவா உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
மேலும் 2018ஆம் ஆண்டு இவர் நடித்து வெளிவந்த நடிகையர் திலகம் படம் இந்தியளவில் இவருக்கு மிக பெரிய பெயரை சம்பாதித்து தந்தது. இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இவரின் அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது.
இதில் அழகிய புடவையில் அனைவரின் கண்களை ஈர்க்கும் வகையில் தோற்றமளிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
மேலும் இந்த புகைப்படம் ஒரு விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்டது என்றும் சில தகவல்கள் கசிந்துள்ளது.
Oh My Traditional Beauty 😍❤️@KeerthyOfficial 😋❤️ pic.twitter.com/pffAbdXyQj
— Trends Keerthy ™ (@TrendsKeerthy) March 21, 2020