Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பிரணிதா

pranitha actress

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் தினசரி உணவுக்கு கஷ்டப்படுகின்றனர். இதற்காக பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா தனது அறக்கட்டளை மூலம் உதவ முன்வந்துள்ளார். இதற்காக நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளார். அறக்கட்டளை மூலம் 40 சதவீதம் நிதியை திரட்டிவிட்டார். மீதித்தொகையையும் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த தொகையை வைத்து ஏழை எளிய மக்களுக்கு உணவும், உதவி பொருட்களும் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். பிரணிதாவின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.