கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது. ஊரடங்கு வெற்றிகரமாக முடிந்தால் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனாலும் ஊரடங்கை மீறி பலர் வெளியே சுற்றுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களால் வைரஸ் பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
நடிகர்-நடிகைகள் பலரும் பொதுமக்களை வீடுகளில் இருக்கும்படி விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வற்புறுத்தி வருகிறார்கள். 21 நாட்கள் ஊரடங்கு முடிந்ததும் நாடு சகஜ நிலைக்கு திரும்புமா? அல்லது ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்த உண்ணம் உள்ளன. இதுகுறித்து கடைசி நாளில் மத்திய அரசு முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ஊரடங்கு முடிந்த 22-வது நாள் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்.
ஊரடங்கின் முடிவை வெற்றியாக அர்த்தம் கொள்ளக்கூடாது. கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்கும்வரை, நாம் சமூக விலகலை தொடர வேண்டும். இதற்கு பல மாதங்கள் வரை ஆகலாம். தயவு செய்து இதனை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்”. இவ்வாறு ஹிருத்திக் ரோஷன் கூறியுள்ளார்.