Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எங்களுக்கு ஏக்கங்கள் நிறைய உண்டு – சிவகார்த்திகேயன்

sivakarthikeyan speech at plan panni pannanum

பத்ரி இயக்கத்தில் ரியோ, ரம்யா நம்பீசன், ரோபோ ஷங்கர், தங்கதுரை, விஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: ”பத்ரி சாருடைய ‘பாணா காத்தாடி’ படமும், பாடல்களும் ரொம்பவே பிடிக்கும்.

அவரும் யுவன் சாரும் கூட்டணி என்றாலே அதுவொரு தனி உணர்வு. அவர் இதுவரை செய்த படங்களை விட, இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த மேடையில் இருக்கும் அனைவருமே தொலைக்காட்சி, சினிமா இரண்டிலுமே பணிபுரிந்தவர்கள். ஏனென்றால் தொலைக்காட்சியில் இருக்கும்போது சினிமா மேடைகள் கிடைக்குமா என ஏங்கியது உண்டு.

தொலைக்காட்சியில் இருந்தவர்கள் அனைவருமே இந்த மேடையில் இருப்பது கூடுதல் சந்தோஷம். எங்களுக்கு ஏக்கங்கள் நிறைய உண்டு. அதெல்லாம் இந்த மேடையில் பார்ப்பதால் கூடுதல் சந்தோஷம் தருகிறது. ரம்யா நம்பீசன் படம் பண்ணுகிறார், பாடல்கள் பாடுகிறார் என்பதைத் தாண்டி அவர் இயக்கிய குறும்படம் பார்த்தேன். அது அதிகமான தாக்கத்தைக் கொடுத்தது.

அந்தக் குறும்படம் பார்க்கும் போது யாரிடம் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயங்கரமான படைப்பு வரும் என உணர்ந்தேன். கூடிய சீக்கிரம் ரம்யா நம்பீசனை இயக்குநராகவும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.