Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எதிர்பார்த்தது எதுவுமே நடக்கல – ராதிகா ஆப்தே வருத்தம்

Radhika Apte

தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகும் துணிச்சலாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார்.

பரபரப்பாக கிளம்பிய ‘மீ டூ’ பாலியல் புகார்கள் ஒன்றுமே இல்லாமல் போனதில் ராதிகா ஆப்தே விரக்தி அடைந்துள்ளார். சமீபத்தில் மும்பையில் நடந்த விழா ஒன்றில், ”மீ டூ இயக்கம் கிளம்பியதும், சந்தோஷப்பட்டேன். நிறைய பேர்களோட முகமூடி கிழியும். பலருக்கும் தண்டனை கிடைக்கும்னு எல்லாம் எதிர்பார்த்தேன். ஆனா, அப்படி எதுவுமே நடக்கல. பாலிவுட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ‘மீ டூ’ இப்படி நீர்த்துப் போனது ஏமாற்றமளிக்குது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.