Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எந்த நடிகரும் செய்யாததை செய்து காட்டிய சூர்யா ஜோதிகா! பிரம்மிக்க வைத்த புகைப்படங்கள்

suriya and jyothika

சூர்யா சுதா கோங்குரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே போஸ்டர், டீசர், ட்ரைலர் வெளியாகி பலரையும் கவர்ந்தது.

அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது. அரசு பள்ளிகளில் படிக்கும் 100 மாண மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்றார்.

இதுவரை யாரும் இப்படி செய்ததாக தெரியவில்லை. ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக அவர் பாடுபட்டு வருகிறார். மற்றவர்களின் திறமையையும் உழைப்பையும் பாராட்ட அவர் தவறுவதில்லை.

இந்நிலையில் அவர் சில்லுக்கருப்பட்டி படக்குழுவை அழைத்து வாழ்த்து தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். உடன் ஜோதிகாவும் இருக்கிறார்.

இயக்குனர் ஹலிதா இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படம் நல்ல கதைக்களத்துடன் சிறிய பட்ஜெட்டில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சில்லு கருப்பட்டி படக்குழுவை நேரில் அழைத்து சிறப்பு செய்து மற்ற நடிகர்களிடமிருந்து தனித்துவமாய் வெளிப்பட்டிருக்கிறார் சூர்யா.