விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியாவது இந்த கொரோனா ஊரடங்களால் தள்ளிப்போய்விட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தம் என்றே சொல்லலாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் ஒன்று.
இப்படத்தில் அர்ஜூன் தாஸ், சாந்தனு, ஸ்ரீமன், ஸ்ரீநாத், மகாநதி சங்கர், மாளவிகா மோகனன், கௌரி கிஷன் என பலர் நடித்துள்ளனர்.
விஜய்க்கு பல மடங்கு எண்ணிக்கையிலான ரசிகர்களும் இருக்கிறார்கள். பிரபலங்களும் இதில் ரசிகர்களாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஜடேஜா தனக்கு மிகவும் பிடித்த படம் தெறி என விஜய் நடித்த படத்தை ரசிகர்களுடன் சாட் செய்யும் போது குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.