நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். தமிழ் திரையுலகில் அதிகபடியான ரசிகர்கள் பட்டாளத்தை உடையவர். மேலும் இவருக்கு திரைவுலகை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்களும் ரசிகர்களாக இருப்பார்கள்.
அந்த வரிசையில் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்துவும் இணைந்துள்ளார். மேலும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார்.
மேலும். இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ஆரம்ப காலத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஏழாம் அறிவு, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.
அதனை தொடர்ந்து டிமாண்டி காலணி திரைப்படத்தின் மூலம் இயக்குனாராக அறிமுகமானார். மேலும், அப்படம் சூப்பர் ஹிட்டானது. அதன் பின் இவர் இயக்கிய இமைக்கா நொடிகள் திரைப்படமும் பிளாக் பஸ்டர் ஆனாது.
தற்போது இவர் நடிகர் விக்ரம் உடன் இணைந்து கோப்ரா திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.