Tamilstar
News Tamil News

ஒன்றா? இரண்டா? என் தமிழை அதிகம் கூவிய ஆண்குயில் – எஸ்.பி.பி. குறித்து வைரமுத்து உருக்கம்

sp balasubramaniam and vairamuthu

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் அவர் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ஒன்றா? இரண்டா? என் தமிழை அதிகம் கூவிய ஆண்குயில் பாடும் நிலா பாலு. விரைவில் அவர் மீளவும் காற்றை அவர் குரல் ஆளவும் காத்திருக்கிறேன். பால்மழைக்குக் காத்திருக்கும் பூமியைப் போல்… பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியைப் போல்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.