Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம் – சாய்பல்லவி

sai pallavi

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்களும், காவல் துறையினரும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் சேவையை பலரும் பாராட்டுகின்றனர்.

இந்த நிலையில், நடிகை சாய்பல்லவி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த கஷ்டமான காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் அனைத்து வழிகளிலும் உதவியாக இருப்போம். தன்னலமில்லாமல் சேவையாற்றி வரும் மருத்துவ, சுகாதார பணியாளர்கள் காவல்துறை அண்ணன்கள், அக்காள்களுக்கு என்றைக்கும் கடமைப்பட்டு உள்ளோம்’ என்று கூறியுள்ளார்.