தில்லி பாபு தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், ஷா ரா, வாணி போஜன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஓ மை கடவுளே”
வாழ்க்கையில் ஒருவன் செய்த தவறை திருத்திக் கொள்ள ஒரு டிக்கெட் கிடைத்தால் எப்படி இருக்கும் என்பது தான் “ஓ மை கடவுளே”
அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் ஷா ரா சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்கள். ரித்திகா சிங்-கிற்கு மாப்பிள்ளை பார்க்கும் தருணத்தில் அசோக் செல்வனிடம் என்னை திருமணம் செய்து கொள்வாயா என யதார்த்தமாக கேட்க, அசோக் செல்வன் ரித்திகாவை வேண்டாம் என சொல்ல ஒரு காரணமும் இல்லை என்று திருமணம் செய்து கொள்கிறார். நண்பர்கள் வாழ்க்கை கணவன் மனைவியாக நிறையவில்லை என விவாகரத்து வரை வந்து நிற்கிறது. அப்போது கடவுளாக விஜய் சேதுபதி வருகிறார் உன் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள் என ஒரு டிக்கெட்டை மூன்று கண்டிஷனோடு தருக்கிறார். பின்பு அவர் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டார் என்பது மீதி பாதி.
படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், ஷா ரா, வாணி போஜன் என அணைவரும் மிக நன்றாகவே நடித்திருந்தார்கள்.
இசை, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்தது. படத்தின் நேரம் சில இடங்களில் நம்மை நெளிய வைக்கிறது.
காதலர் தினத்தன்று பல காதலர்களை சந்தோஷப்படுத்தும் இந்த திரைப்படம் முக்கியமாக பெஸ்டியை.