தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன், காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ரா, தேவி ஸ்ரீ பிரசாத், லா, தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் பிரபல வீடியோ ஜாக்கியாக இருந்த கிரெய்க் கேலியாட்டை காதலித்து வந்த பூஜா ராமசந்திரன், 2010ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். 7 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, கிரெய்கை விவாகரத்து செய்த பூஜா, ஜான் கொக்கன் எனும் நடிகரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகளவில் மக்கள் பயந்து நடுங்கிப் போயுள்ள நிலையில், நடிகை பூஜா ராமசந்திரன், மாலத்தீவில் தனது கணவருடன் நேற்று பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்தை கூறியிருக்கிறார் அவரது கணவர்.