தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. நடித்தால் ஹீரோ தான் என என்றில்லாமல் கதை பிடித்திருந்தால் வில்லனாகவும் நடிக்கிறார்.
அப்படி தான் ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்தில், சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவர் அடுத்ததாக உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் விஜய் சேதுபதியும் கமல்ஹாசனும் உரையாடி இருந்தனர்.
இதனையடுத்து விஜய் சேதுபதி தலைவன் இருக்கின்றான் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வந்தது.
இப்படியான நிலையில் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தேவர் மகன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி நாசரின் மகன் வேடத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
அதேபோல் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது லாபம், கடைசி விவசாயி என இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாக் டவுன் முடிந்ததும் விஜய் சேதுபதியின் படங்கள் வரிசையாக ரிலீஸுக்கு நிற்கும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.