Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கமல் சாருக்கு எப்படி துரோகம் நினைப்பேன், சர்ச்சைக்கு முதன் முறையாக விளக்கமளித்த லாரன்ஸ்

raghava lawrence

கமல் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் இவர் குறித்து லாரன்ஸ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆம், தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ‘கமல் போஸ்டருக்கு சிறிய வயதில் சாணியடித்துள்ளேன்’ என்று லாரன்ஸ் பேசினார்.

இதுக்குறித்து நேற்று நடந்த ரஜினி பிறந்தநாள் விழாவில் லாரன்ஸ் ‘கமல் சாருக்கு நான் ஒருநாளும் துரோகம் நினைக்க மாட்டேன்.

சிறிய வயதில் அதுவும் அறியாத வயதில் கமல் சார் போஸ்டரில் சாணியடித்தேன், ஆனால், தற்போது அதை நினைத்தால் தவறாக உள்ளது என்று தான் கூற வந்தேன்.

ஆனால், அது தவறாகி போனது’ என்று லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.