Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கமல் பாடலை ரீமிக்ஸ் செய்த ஸ்ருதிஹாசன்

kamal haasan and shruti hassan

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல பிரபலங்களும் தங்களது நேரத்தை ரசிகர்களுடன் சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் Hula Hoop exercise குறித்த வீடியோ ஒன்றை பதிவு செய்தார். தற்போது கமல் நடிப்பில் வெளியான நாயகன் படத்தில் இடம் பெற்ற தென்பாண்டி சீமையிலே என்ற பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார்.

அவரே இசையமைத்து பாடிய இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.