Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காதலனுடன் சுசீந்திரம் கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

nayanthara and vignesh shivan

நடிகை நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு குமரி மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நயன்தாராவும், அவரது காதலன் விக்னேஷ் சிவனும் குமரியில் தங்கியிருந்து அம்மாவட்டத்தில் உள்ள பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.

இந்தநிலையில், நேற்று இரவு 7.30 மணியளவில் இருவரும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் சென்ற நேரத்தில் ஸ்ரீபலி பூஜைக்காக மூலஸ்தான நடை மூடப்பட்டது. இதையடுத்து நயன்தாராவும், அவரது காதலனும் சுமார் ½ மணி நேரம் காத்திருந்து நடை திறந்த பின்பு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே நயன்தாரா வந்திருப்பதை அறிந்ததும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ரசிகர்கள் கோவில் முன்பு திரண்டனர். அவர்கள் நயன்தாராவுடன் செல்பி எடுக்க முயன்றனர். ஆனால், அவருடன் வந்த காவலர்கள் ரசிகர்கள் யாரும் நெருங்காதவாறு தடுத்து இருவரையும் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். நயன்தாராவின் வருகையால் கோவில் வளாகத்தில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.