நடிகை ஆண்ட்ரியா ஒரு புத்தகம் எழுதியிருப்பதாகவும் அதில் அவர் காதலில் சிக்கிய ஒரு நபர் குறித்து குறிப்பிட்டுள்ளதாகவும் செய்திகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த நபர் ஒரு நடிகர் அல்லது அரசியல்வாதி என்று பரபரப்பாக சொல்லப்பட்டது. ஆனால் ஆண்ட்ரியா வாய்திறக்கவில்லை. ஆண்ட்ரியா தற்போது அளித்துள்ள பேட்டியில் உண்மை என்ன என்பதை விளக்கியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் பேசிய நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் யாரும் இல்லை. கேமரா எதுவும் இருக்கவில்லை . அதனால் என் வாழ்க்கை குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக சொன்னேன். நான் நடிகை என்பதையே மறந்து விட்டேன். அது தவறு என பின்பு தான் எனக்கு உரைத்தது .
புத்தகத்தில் உள்ள ஒரு கவிதையை நான் படித்தேன். அப்போது அது எதை பற்றியது என கேட்டார்கள். நான் என்னுடைய மோசமான ஒரு காதல் குறித்தது என கூறினேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காதல் அது. 10 வருடம் முன்பு தான் அந்த கவிதையை எழுதினேன்.
ஆனால் அதன்பிறகு நான் பேசியதாக பல்வேறு தவறான செய்திகள் கிளம்பி விட்டது. இதை எல்லாம் பார்த்து எனக்கு கோபம் தான் வந்தது. ‘நடிகர் அரசியல்வாதி’ என்றெல்லாம் சொல்கிறார்கள். கட்டுக்கதை போல ஒரு விஷயத்தை கிளப்பி விட்டுள்ளார்கள். அதற்கு எப்படி விளக்கம் அளிப்பது? அதனால் அமைதியாக இருந்துவிட்டேன்.
இவ்வாறு ஆண்ட்ரியா கூறி இருக்கிறார்.
விஜய்யுடன் நடிக்கும் அனுபவம் பற்றிய கேள்விக்கு ‘அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனால் விஜய் மிக சிறந்த மனிதர். எந்த பந்தாவும் ஈகோவும் இல்லாமல் பழகுபவர். அவருடன் நடிக்க தொடங்கிய பின்னர் அவர் ரசிகையாகவே மாறிவிட்டேன்’ என்று கூறி இருக்கிறார்.