தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் மத்தியில் தனது கடின உழைப்பினால் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தவர் தல அஜித்.
இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளிவரும் என தயாரிப்பாளர் போனி கபூர் அண்மையில் விருது விழா ஒன்றில் கூறினார்.
இந்நிலையில் அஜித் இப்படத்திற்கு முன்பு சிவா இயக்கத்தில் வெளிவந்த விஸ்வாசம் படத்தில் நடித்திருந்ததை நாம் அறிவோம். இப்படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த பாட்டு என்றால் அது கண்டிப்பாக ‘கண்ணான கண்ணே’ பாடல் தான்.
தற்போது இப்பாடலை கேரளா காவல் துறை அதிகாரி ஒருவர் கிட்டாரில் வாசித்து அசத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ளது. மேலும் இது காவல் துறையினரிடம் இருந்து அஜித்துக்கு கிடைத்த மிக பெரிய பெருமை என்று, இந்த விடியோவை தற்போது அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் வைரலாகி வருகிறார்கள்.
Kerala Police Guitars the #KannanaKanne Song from #Viswasam 😍❤ #ThalaAjith@immancomposer @ajithFC @TFC_mass @AjithFCVellore #Valimai #ValimaiDiwali pic.twitter.com/D36TwQ3lPj
— UNNI THALA VISHNU (@unnivishnu1992) February 26, 2020