சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலத்திலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்தவகையில், அவரது தொகுதியில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அறிந்த ரோஜா அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிட்டார்.
ஆனால் கொரோனா பயத்தால் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்க அஞ்சியதால், ரோஜா தானே களத்தில் இறங்கி பாதுகாப்பு கவசங்களுடன் கிருமி நாசினி தெளித்தார். அப்பகுதி முழுவதும் அவர் கிருமி நாசினி தெளித்தார். ரோஜாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.