மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி (தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாரான படம்) படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் குடும்பத்தினர் முன்னிலையில் தேசிய விருதை பெற்றுக் கொண்டார்.
இவருக்கு திரையுலகினர், ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை கூறினார்கள். இந்நிலையில், ரஜினி நடிப்பில்
உருவாகி வரும் ‘தலைவர் 168’ படக்குழுவினர் கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டு தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.
சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.