தமிழ் சினிமாவில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்று பரதேசி, பேராண்மை, கபாலி படங்கள் மூலம் நிரூபித்தவர் சாய் தன்ஷிகா. ஆனந்த மூர்த்தி இயக்கத்தில், இவர் நடித்திருக்கும் குறும்படம் சினம்.
பெரிய படங்களில் பிசியாக இருக்கும் போதே குறும்படத்தில் நடித்தது ஏன் என்று கேட்டதற்கு சாய் தன்ஷிகா கூறியதாவது, ‘தன் மகள், வேறு சாதி இளைஞனை காதலித்து, திருமணம் செய்து கொள்கிறாள் என்றவுடன், அந்த தந்தை செய்யும் கொடூரமும், அதற்கு மகள் அளிக்கும் பதிலும் தான் படம். மொத்தம், 20 நிமிடம் கொண்ட படத்தில், தொடர்ந்து, 16 நிமிடங்கள் நான் பேசுகிறேன். உலக அளவில், இப்படம் பல விருதுகளை பெற்றுள்ளது’ என்றார்.