Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குழந்தைகளுடன் பொழுதை போக்கும் சமீரா

sameera reddy baby

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு அக்‌ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டுவந்தார். திருமணத்திற்கு பிறகு தனது இரண்டு குழந்தைகளுடன் சமீரா ரெட்டி முழு நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார். அந்தவகையில் தற்போது தனது அன்பு குழந்தைகளின் அழகிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.