ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தர்பார்’. இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜனவரி 9-ந் தேதி வெளியான இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
இந்த நிலையில், மதுரையில் உள்ள ஒரு தனியார் கேபிள் டிவி சேனலில் ‘தர்பார்’ திரைப்படத்தை ஒளிபரப்பி இருப்பதை அறிந்த ரஜினி மக்கள் மன்றத்தினர், இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். ‘தர்பார்’ திரைப்படம் வெளியாகி 4 நாட்களே ஆன நிலையில் கேபிள் டிவியில் படத்தை ஒளிபரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்பார் படம் கேபிள் டிவியில் ஒளிபரப்பப்பட்டது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
IMMEDIATE ATTENTION REQUIRED #Darbar Was Telecasted in Local Channel of TN State Set-top BOX in Madurai
Dear @CMOTamilNadu @Kadamburrajuofl
Take Necessary Action
Dear @LycaProductions Please Note@divomovies @ViyasD @ARMurugadoss @mayavarathaan pic.twitter.com/O9hR2ne0po
— Rajinikanth Fans 💯 (@Rajni_FC) January 13, 2020