Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கேரளாவில் விஜய் சேதுபதிக்கு விருது

vijay sethupathi

கேரளாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அங்குள்ள விமர்சகர்கள் கில்டு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருதை பெறுகிறார். இந்த படத்தை இயக்கிய தியாகராஜன் குமார ராஜா சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுபோல் தமிழில் சிறந்த நடிகைக்கான விருது ‘ஆடை’ படத்தில் நடித்த அமலாபாலுக்கு வழங்கப்படுகிறது.

இந்த படத்தில் அவர் நிர்வாணமாக துணிச்சலாக நடித்து இருந்தார். சிறந்த மலையாள படத்துக்கான விருது மது சி.நாராயணன் இயக்கிய ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படத்துக்கு கிடைத்துள்ளது. இதில் பகத் பாசில், ஷேன் நிகம் ஆகியோர் நடித்து இருந்தனர்.

சிறந்த மலையாள நடிகருக்கான விருது காலித் ரகுமான் இயக்கத்தில் ‘உண்டா’ படத்தில் நடித்த மம்முட்டிக்கும், சிறந்த நடிகைக்கான விருது ‘உயரே’ படத்தில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்த பார்வதிக்கும் வழங்கப்படுகிறது. ‘வைரஸ்’ படத்தை இயக்கிய ஆஷிக் அபுவுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது.