தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் வடிவேலு. ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் காமெடியில் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு கமல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில் வடிவேலு கொரோனாவை வெல்வோம் என்று பதிவு செய்து ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். மனிதர்களின் அலட்சியமும், அதை கொரோனா எப்படி உணர வைத்தது என்றும் அவர் தனது பாடலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனாவை வெல்வோம் pic.twitter.com/rD486Yek42
— Actor Vadivelu (@VadiveluOffl) April 15, 2020