நடிகை மாளவிகா மோகனன் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாகவும். ரசிகர்கள் பலரின் மனதில் இடம் பிடித்த நடிகையாகவும் திகழ்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் தனது சமூகவலைத்தள பக்கத்தில் இவர் அவ்வப்போது பதிவிடும் புகைப்படங்கள் பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வகையில் இவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் தயாரித்த பிறந்தநாள் CDPயை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருந்தார்.
இதனை ரீ-ட்வீட் செய்த நடிகை மாளவிகா லோகேஷ் கனகராஜிற்கு நன்றி தெரிவித்து, பிறந்தநாளை சென்னையில் கொண்டாட காத்திருந்தேன். ஆனால் “Stupid Covid” என பதிவிட்டுள்ளார்.
Thank you so much @Dir_Lokesh ! ☺️ 🙏🏻 Was waiting to celebrate with #TeamMaster in Chennai, but stupid covid ☹️ https://t.co/busEZ8ztEX
— malavika mohanan (@MalavikaM_) August 3, 2020