கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திரைப்பிரபலங்களும் வீட்டில் முடங்கி உள்ளனர்.
இருப்பினும் சமூக வலைத்தளம் மூலம் தங்களது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது என இயங்கி வருகின்றனர். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா. கடந்த மாதம் 28-ந் தேதிக்கு பின் எந்த பதிவும் இடாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் சமந்தா, நீண்ட தூக்கத்திலிருந்து திரும்பியிருக்கிறேன். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.