Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சினிமாவில் பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

Anushka Shetty

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மீது நடிகைகள் பலர் ஏற்கனவே மீ டூவில் புகார் கூறினர். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியும் செக்ஸ் குற்றம் சாட்டினார். இதில் தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் சிக்கினர். தற்போது தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அனுஷ்காவும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. ஐதராபாத்தில் இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்காவிடம் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக கூறப்படுகிறதே? இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து அனுஷ்கா கூறும்போது, “அப்படி நடக்கவில்லை என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு அதுபோன்ற அனுபவம் எதுவும் ஏற்படவில்லை. காரணம் நான் எப்போதுமே வெளிப்படையாக இருந்து இருக்கிறேன். பெண்களிடம் இதுபோன்ற ஆதாயங்களை சினிமா துறையினர் எதிர்பார்த்தால் அது தவறு. அதனை தவிர்க்க வேண்டும்” என்றார்.