Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிம்பு ரெடினா நானும் ரெடி… திரௌபதி இயக்குனர்

simbu and director mohan g

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் வெளியான படம் திரௌபதி. இதில் ரிச்சர்ட் ரிசி, சீலா ராஜ்குமார் மற்றும் கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தை அடுத்து இயக்குனர் மோகன் ஜி- ரிச்சர்ட் ரிசி மீண்டும் புதிய படம் மூலம் இணையஇருக்கிறார்கள். மேலும் எனது அடுத்த படத்தின் தலைப்பும் ஒரு கடவுள் பெயர் தான் என்று மோகன் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் “நீங்களும் சிம்புவும் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும்” என்று கூற, அதற்கு பதிலளித்த அவர் “சிம்பு ரெடினா நானும் ரெடி. எனது அடுத்த படத்தை முடித்துவிட்டு சிம்புவுடன் பேசுவேன்” என்று கூறியுள்ளார்.